Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

துணை வேலைஓய்வுத் திட்டம் (SRS) என்றால் என்ன?

Supplementary Retirement Scheme (SRS) எனும் துணை வேலைஓய்வுத் திட்டத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூரர்கள் சிங்கப்பூர் சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம் என்று இன்று (டிசம்பர் 17) அறிவிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
துணை வேலைஓய்வுத் திட்டம் (SRS) என்றால் என்ன?

கோப்புப் படம்: Today

Supplementary Retirement Scheme (SRS) எனும் துணை வேலைஓய்வுத் திட்டத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூரர்கள் சிங்கப்பூர் சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம் என்று இன்று (டிசம்பர் 17) அறிவிக்கப்பட்டது.

துணை வேலைஓய்வுத் திட்டம் என்றால் என்ன?

வேலை ஓய்வுக்காலத்திற்குப் பணம் சேமிக்க ஊக்குவிப்பதே  துணை வேலைஓய்வுத் திட்டத்தின் நோக்கம். மத்திய சேமநிதிச் சேமிப்புகளுக்கு மேலாக கூடுதலாகச் சேமிக்க அத்திட்டம் உதவும். துணை வேலைஓய்வுத் திட்டத்திற்கு வரிக் கழிவுகளும் கொடுக்கப்படுகின்றன. திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கணக்கிலிருந்து மீட்கும் முன் அதற்கு வரி செலுத்தத் தேவையில்லை. ஓய்வுபெற்ற பின் திட்டத்திலிருந்து எடுக்கும் பணத்தில் பாதிப் பங்கிற்கு மட்டுமே வரி செலுத்தத் தேவை.

துணை வேலைஓய்வுத் திட்டத்தில் யார் சேரலாம்?

குறைந்தது 18 வயதுள்ள வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்களோ சிங்கப்பூர் நிரந்தரவாசிகளோ வெளிநாட்டவர்களோ திட்டத்தில் விருப்பத்திற்கேற்பச் சேரலாம். அவர்கள் முன்பு நொடித்துப் போயிருக்கக் கூடாது. அவர்கள் எவ்வித மனநலப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்படிருக்கக்கூடாது. தங்கள் நிதி நிர்வாகத்தைச் சொந்தமாகவே பார்த்துக்கொள்ளும் ஆற்றல் தேவை. முதலாளிகளும் தங்கள் ஊழியர்களின் சார்பில் துணை வேலைஓய்வுத் திட்டத்திற்குச் சந்தா செலுத்தலாம்.

மாதந்தோறும் எவ்வளவு பணத்தைத் திட்டத்தில் செலுத்த வேண்டும்?

துணை வேலைஓய்வுத் திட்டக் கணக்குகளில் எப்போது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பணத்தைச் செலுத்தலாம். சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் ஆண்டுக்கு அதிகபட்சமாக 15,300 வெள்ளியைத் துணை வேலைஓய்வுத் திட்டத்திற்கு ஒதுக்கலாம். வெளிநாட்டவர்கள் ஆண்டுக்கு அதிகபட்சமாக 35,700 வெள்ளி ஒதுக்கலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்