Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரர்கள் எதை அதிகம் விரும்புகிறார்கள் ? நகரச் சீரமைப்பு ஆணையம் நடத்திய கருத்தாய்வு

சிங்கப்பூரர்கள் எதை அதிகம் விரும்புகிறார்கள் ? நகரச் சீரமைப்பு ஆணையம் நடத்திய கருத்தாய்வு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரர்கள் எதை அதிகம் விரும்புகிறார்கள் ? நகரச் சீரமைப்பு ஆணையம் நடத்திய கருத்தாய்வு

(கோப்புப் படம்: TODAY)

சிங்கப்பூரர்கள், தரமான கட்டுப்படியான வீடு, பசுமையான சுற்றுச்சூழல், மற்றவர் மீது பரிவு காட்டும் சமூகம் ஆகியவற்றை அதிகம் விரும்புவதாக, நகரச் சீரமைப்பு ஆணையம் அண்மையில் நடத்திய கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.

ஜூலையிலிருந்து இம்மாதம் வரை, இணையம் வழி நடைபெற்ற கருத்துக் கணிப்பிலும் பயிலரங்குகளிலும் சுமார் ஆறாயிரம் பேர் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூரின் நிலத்தை அடுத்த 50 ஆண்டுகளில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற ஆணையத்தின் நீண்ட காலத் திட்டத்தை ஒட்டிக் கருத்தாய்வு நடத்தப்பட்டது.

கருத்தாய்வு குறித்து நடைபெற்ற இணையக் கருத்தரங்கில், தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா பேசினார்.

சிங்கப்பூர் தற்போது மாறுபட்ட சவால்களை எதிர்கொள்வதாக அவர் கூறினார்.

பருவநிலை மாற்றம் குறித்த கவலையும் கருத்தாய்வில் முன்வைக்கப்பட்டது.

நகரச் சீரமைப்பு ஆணையத்தின் மதிப்பீடு அடுத்த ஆண்டு நிறைவுபெறும் 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்