Images
  • whatsapp new
    படம்: Pixabay 

WhatsApp செயலியின் புதிய நிபந்தனைகள் - WhatsApp எதிர்நோக்கிய பின்விளைவுகள்

Facebook நிறுவனத்தின் WhatsApp செயலி, பயனீட்டாளர்களின் தனிநபர் தரவுகள் தொடர்பிலான அதன் புதிய நிபந்தனைகளைப் பற்றித் தகவல் அளித்துள்ளது.

குறுந்தகவல் அனுப்பும் செயலியான WhatsAppஐத் தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால், பயனீட்டாளர்கள் அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் உள்ளது.

இது உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதைக் கடுமையாகச் சாடியிருக்கும் பலர், Telegram போன்ற வேறு தளங்களுக்கு மாறுவதாகக் கூறியுள்ளனர்.

அதற்குப் பதிலடி?

  • துருக்கி WhatsApp செயலியை நீக்குகிறது
  • தொழிலதிபரும் செல்வந்தருமான இலோன் மஸ்க் (Elon Musk), WhatsApp செயலிக்குப் போட்டியான Signal செயலியைப் பயன்படுத்துமாறு மக்களை ஊக்குவித்தார். பலரும் அவ்வாறே செய்தனர்.

ஐரோப்பாவில் என்ன நடக்கிறது?

  • ஐரோப்பாவில் தனிநபர் தொடர்பிலான சட்டங்கள் கடுமையானவை.
  • அங்குப் பயன்படுத்தப்படும் Facebook செயலியில் வேறுபட்ட தனிநபர் நிபந்தனைகள் உள்ளன.
  • ஐரோப்பியத் தனிநபர் சட்டங்களை மீறும் நிறுவனங்களின் வருமானத்தில் 4 விழுக்காடு வரை அபராதம் விதிக்கப்படலாம், அதனால் அவற்றை மீற நிறுவனங்கள் தயங்குகின்றன.
  • Facebook நிறுவனம், WhatsApp செயலியில் பதிவாகும் தனிநபர் தரவுகளை அதன் மற்ற சேவைகளுடன் இணைக்கமுடியாது எனக் கூறியிருந்தது. ஆனால், அது பொய்யாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
  • அதனால், 2017ஆம் ஆண்டில் Facebook நிறுவனம் 134 மில்லியன் டாலர் அபராதம் கட்டவேண்டியிருந்தது.  
Top