Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பள்ளிவாசல்கள் மீண்டும் திறக்கப்படும்போது....

சிங்கப்பூரில் பள்ளிவாசல்கள் அடுத்த மாதம் 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் பள்ளிவாசல்கள் அடுத்த மாதம் 2-ஆம் தேதி முதல் கட்டங்கட்டமாக மீண்டும் திறக்கப்படும்.

அதன் தொடர்பில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்... ஒரு பார்வை...

- ஜூன் 2 முதல் ஜூன் 7 வரை

பள்ளிவாசல்கள் பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும்

- ஜூன் 8 முதல்

பெரும்பாலான பள்ளிவாசல்களில், தினமும் 5 தொழுகைகள் நடத்தப்படும்.

  • வெள்ளிக்கிழமைகள் உட்பட, பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகைகள் நடத்தப்பட மாட்டா.
  • தொழுகைக்காக அதிகபட்சம் ஐந்து பகுதிகள் வரையறுக்கப்படும்.
  • ஒவ்வொரு பகுதியிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வரை தொழலாம்.
  • அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • மற்றவர்கள் தேவை இருந்தால் மட்டுமே பள்ளிவாசல்களுக்குச் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
  • உடல் சோதனை, உடல் வெப்பநிலைச் சோதனை, SafeEntry எனும் மின்னிலக்க வருகைப் பதிவுமுறை ஆகியவற்றை மேற்கொள்ளவேண்டும்
  • முகக் கவசங்களை அணியவேண்டும், தொழுகைக்குத் தேவைப்படும் பொருள்களை சொந்தமாகக் கொண்டுசெல்லவேண்டும்.
  • மற்றவர்களுடனான நேரடித் தொடர்பைத் தவிர்க்கவேண்டும். கைகுலுக்குவதைத் தவிர்க்க வேண்டும்.
  • உடல்நலம் இல்லாதவர்கள் பள்ளிவாசலுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்