Images
  • WHO
    (REUTERS/Denis Balibouse)

உலகச் சுகாதார நிறுவன நிர்வாகக் குழுவின் கூட்டத்தில் மூத்த துணையமைச்சர் லாம் பின் மின் கலந்துகொண்டார்

சுகாதாரம், போக்குவரத்து ஆகியவற்றுக்கான மூத்த துணையமைச்சர் லாம் பின் மின், உலகச் சுகாதார நிறுவன நிர்வாகக் குழுவின் 147ஆவது கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

இணையம் வழி அந்தச் சந்திப்பு நேற்று நடைபெற்றதாகச்
சுகாதார அமைச்சு கூறியது.

சந்திப்பில் வெவ்வேறு செயற்குழுக்களுக்கான தலைமைத்துவ நியமனங்கள் குறித்துக் கலந்தாலோசிக்கப்பட்டது.

உலகச் சுகாதாரப் பொதுச் சபை, நிர்வாகிகள் வாரியம், வரவுசெலவு நிர்வாகக் குழு ஆகியவற்றின் அடுத்த சந்திப்புகள் குறித்தும் தலைவர்கள் பேச்சு நடத்தினர்.

34ஆவது நிர்வாகிகள் வாரியத்தின் உறுப்பினராகத் திரு. லாம் சென்ற ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். மூவாண்டுக்கு அவர் அந்தப் பொறுப்பில் இருப்பார்.

வரவுசெலவு நிர்வாகக் குழுவிலும் ஈராண்டுக்கு உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். உலகச் சுகாதார நிறுவனத்தின் பல்வேறு நிதி நிர்வாகத் திட்டங்களுக்கு அந்தக் குழு பொறுப்பேற்கிறது.

Sasakawa சுகாதாரப் பரிசை நிறுவுவதற்கான குழுவிலும் டாக்டர் லாம் பங்கேற்றுள்ளார்.  

Top