Images
  • Widod Halimah
    (படம்: MCI)

சிங்கப்பூர், இந்தோனேசிய அதிபர்கள் இருதரப்பு நீடித்த, உன்னத உறவை மறுவுறுதிப்படுத்திக்கொண்டனர்


சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பும், இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும், இருதரப்பு நீடித்த, உன்னத உறவை மறுவுறுதிப்படுத்தியுள்ளனர்.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் இரு அதிபர்களும் சந்தித்தனர்.

அதிபர் ஹலிமா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கினார்.

இந்தோனேசிய அதிபரின் இளைய மகன் இன்று அந்தப் பல்கலையின் பட்டத்தைப் பெற்றுக்கொண்டதாக அமைச்சு கூறியது.

வர்த்தகம், முதலீடு, மனிதவள மேம்பாடு, சுற்றுப்பயணத் துறை, கல்வி, கலாசாரம் ஆகியவற்றில் உறவை வலுப்படுத்த இருநாட்டு அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகளை இரு அதிபர்களும் வரவேற்றனர்.

அடுத்த ஆண்டு இந்தோனேசியாவிற்கு வரும்படி திருவாட்டி ஹலிமாவிற்குத் திரு விடோடோ அழைப்புவிடுத்தார்.

சிங்கப்பூர்-இந்தோனேசியத் தலைவர்கள் சந்திப்பிற்காக 2 நாள் பயணம் மேற்கொண்டு திரு. விடோடோ இங்கு வந்துள்ளார்.

Top