Images
  • husband slash

கணவரைக் கத்தியால் தாக்கிய மனைவிக்குச் சிறைத் தண்டனை

கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து கத்தியைக் கொண்டு அவரைத் தாக்கிய மனைவிக்கு 7 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த அந்த 29 வயது மாது, 50 வயது சிங்கப்பூரரைக் கடந்த 2016ஆம் ஆண்டு மணமுடித்தார்.

கடந்த ஓராண்டாக தம்பதி இடையே அடிக்கடி கருத்துவேற்றுமை உருவாகி மனைவி, கணவரைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. சென்ற செப்டம்பர் மாதம் வாக்குவாதம் முற்றி மாது, கணவரை 15 செண்டிமீட்டர் கத்தியைக் கொண்டு தாக்கியுள்ளார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில், கணவர் தம்மிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தித் தங்கள் ஒரு வயதுக் குழந்தையைக் கன்னத்தில் அறைந்து அதைப் படம்பிடித்து அவர் தமது கணவருக்கு அனுப்பினார்.

பலமுறை தமது மனைவியின் துன்புறுத்தல்களைப் பொறுத்துக்கொண்ட கணவர், பிள்ளையின் கன்னம் சிவந்து வீங்கியிருப்பதைக் கண்டு பொறுமையிழந்தார்.

உடனடியாகக் காவல்துறையைத் தொடர்புகொண்ட கணவர், மனைவி மீது புகார் கொடுத்தார்.

ஆபத்தான ஆயுதத்தால் பிறருக்குக் காயம் ஏற்படுத்திய குற்றத்திற்கு 7ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையோ, அபராதமோ அவருக்கு விதிக்கப்பட்டிருக்கலாம்.

 

Top