Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புக்கிட் தீமா விரைவுச் சாலை விபத்து : கர்ப்பமான காட்டுப் பன்றி மாண்டது

உட்லண்ட்சுக்குச் செல்லும் வழியில் மண்டாய் ரோட்டுக்கு அருகே நடந்த விபத்தில் மூன்று கார்கள் சம்பந்தப்பட்டிருந்ததாகத் தகவல் அளிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
புக்கிட் தீமா விரைவுச் சாலை விபத்து : கர்ப்பமான காட்டுப் பன்றி மாண்டது

(படம்: சேனல் நியூஸ்ஏஷியா/சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் படம்)

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் கர்ப்பமான காட்டுப் பன்றி ஒன்று மாண்டது.

உட்லண்ட்சுக்குச் செல்லும் வழியில் மண்டாய் ரோட்டுக்கு அருகே நடந்த விபத்தில் மூன்று கார்கள் சம்பந்தப்பட்டிருந்ததாகத் தகவல் அளிக்கப்பட்டது.

விபத்தில் அடிபட்ட காட்டுப்பன்றியின் குட்டிகள் சாலையில் கிடக்கும் படங்கள் இணையத்தில் பரவுகின்றன.

விரைவுச்சாலையைக் காட்டுப்பன்றி கடக்க முயற்சிசெய்தபோது இரண்டு வாகனங்கள் அதை மோதியதாகச் சேனல் நியூஸ்ஏஷியா அறிகிறது. 

அவ்வழியே வந்த மூன்றாவது கார், காட்டுப் பன்றியை மோதிய கார்களில் ஒன்றின்மீது மோதியது.

நேற்று இரவு 7.40 மணி வாக்கில் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

விசாரணை தொடர்கிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்