Images
  • boar
    ( படம்: ACERS )

பொங்கோலில் விபத்தில் சிக்கி காட்டு பன்றி பலி

பொங்கோல் வாட்டர்வே பாயின்ட் வட்டாரத்தில் இன்று ஒரு காட்டுப் பன்றி விபத்தில் சிக்கிப் பலியானது.

வாட்டர்வே பாயின்ட் வட்டாரத்தில் இரண்டு காட்டு பன்றிகள் நடமாடுவதாகக் காலை 12 மணியளவில் ACRES வனவிலங்கு மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்தபோது விபத்தில் சிக்கிய காட்டுப் பன்றி வாகனம் நிறுத்தும் இடத்தில் இறந்துகிடத்தது.

அதைத் தொடர்ந்து தேசியச் சுற்றுப்புற அமைப்பு காட்டு பன்றியை அகற்றியதாக ACRES தெரிவித்தது.

பொங்கோல் வட்டாரத்தில் காட்டுப் பன்றிகள் அவ்வப்போது தென்படும். ஆனால் அவற்றின் மூலம் பெரிய தொந்தரவு ஏற்படுவதில்லை என்று அந்த வட்டாரவாசிகள் கூறினர்.
 

Top