Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காட்டுப் பன்றிகளுக்கு இரை போட்டதாக 8 பேர் மீது குற்றச்சாட்டு; மேலும் 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்படும்

லோரோங் ஹாலுஸில் காட்டுப் பன்றிகளுக்கு இரை போட்டதாக 8 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.மேலும் 11 பேர் மீது, அடுத்த இரண்டு வாரத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

வாசிப்புநேரம் -
காட்டுப் பன்றிகளுக்கு இரை போட்டதாக 8 பேர் மீது குற்றச்சாட்டு; மேலும் 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்படும்

(படம்: Chew Hui Min)

லோரோங் ஹாலுஸில் காட்டுப் பன்றிகளுக்கு இரை போட்டதாக 8 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.மேலும் 11 பேர் மீது, அடுத்த இரண்டு வாரத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் நால்வர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு 2,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 7ஆம் தேதி வரை தேசியப் பூங்காக் கழகம் மேற்கொண்ட சோதனைகளில் அவர்கள் காட்டுப் பன்றிகளுக்கு ரொட்டியோ நாய்களுக்கான உணவோ கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பரில், லோரோங் ஹாலுஸுக்கு அருகில் உள்ள சுங்காய் அப்பி அப்பி பூங்காவில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த 50-வயது மாது காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டார். அவருக்கு காலிலும் முகத்திலும் இரத்தக் காயங்கள் ஏற்பட்டன.

'பண்ணை'க்குச் செல்லும் வழியில் காட்டில் உள்ள நாய்களுக்கு ரொட்டி கொடுக்க விரும்பியபோது, நாய்கள் அவற்றைச் சாப்பிட மாட்டா என்று நண்பர் கூறியதால், அந்த ரொட்டியைக் காட்டுப் பன்றிக்குப் போட்டதாகக் கூறினார் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர்களில் ஒருவர்.

வனவிலங்குச் சட்டத்தின்படி முதன்முறை குற்றம் புரிவோருக்கு 5,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.

மறுமுறை அதே குற்றம் புரிபவர்களுக்கு 10,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்