Images
  • mandai 2
    படம்: Mandai Wildlife Group

சிங்கப்பூரின் வனவிலங்குப் பூங்காக்கள் சிலவற்றுக்குப் புதுப் பெயர், புதுச் சின்னம்

River Safari, Jurong Bird Park ஆகியவை பெயர் மாற்றம் காண்கின்றன.

சிங்கப்பூரின் வனவிலங்குப் பூங்காக்கள் சிலவற்றுக்குப் புதிய சின்னங்கள் உருவாக்கப்படுகின்றன.


படம்: Mandai Wildlife Group

River Safari இப்போதிருந்து River Wonders என்ற பெயருடன் செயல்படும். மண்டாய்ப் பகுதிக்கு இடம் மாற்றப்பட்ட ஜூரோங் பறவைப் பூங்காவின் புதுப் பெயர், Bird Paradise.

சிங்கப்பூரின் வனவிலங்குக் காப்பகத்துக்குப் பதிலாக, மண்டாய் வனவிலங்குக் குழுமம் அத்தகைய வனவிலங்குப் பூங்காக்களின் செயல்பாடுகளை வழிநடத்தும்.


படம்: Mandai Wildlife Group

மண்டாய்ப் பகுதியில் தற்போது இடம்பெற்றுவரும் கட்டுமானப் பணிகளையும் குழுமம் மேற்பார்வையிடும்.

மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தின் கீழ் ஐந்து பூங்காக்கள் உள்ளன:

  1. சிங்கப்பூர் விலங்குத் தோட்டம்
  2. Night Safari
  3. River Wonders
  4. Bird Paradise
  5. தற்போது உருவாகிவரும் Rainforest Wild

Come to Life என்ற முழக்கவரியுடன் குழுமம் செயல்படுகிறது.

மண்டாய்ப் பகுதியில் உருவாகிவரும் புதிய வளாகத்தின் கட்டுமானப் பணிகள் 2024ஆம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Top