Images
  • wine

எதிர்பார்ப்பை விஞ்சி விற்பனையில் சாதனை படைத்த 73ஆண்டுப் பழமையான ஒயின் போத்தல்

உலகின் ஆகச் சிறந்த ஒயின் (wine) ஆகக் கருதப்படும், Romanee-Conti ஒயின் போத்தல் ஒன்று, சாதனை அளவாக, 558ஆயிரம் டாலருக்கு ஏலத்தில் விலைபோயுள்ளது.

1945ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 600 போத்தல்களில் அதுவும் ஒன்று என்பது சிறப்பம்சம்.

நேற்று நடந்த ஏலத்தில், அதிகபட்சம் 32ஆயிரம் டாலருக்கு அது விற்பனையாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் 17 மடங்கு கூடுதல் தொகையை அது ஈட்டித் தந்தது.

இதற்கு முன்னர், 2010ஆம் ஆண்டு ஹாங்காங்கில் இடம்பெற்ற தரமான ஒயின்-போத்தலுக்கான ஏலத்தில், 1869ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட Chateau Lafite Rothschild ஒயின் போத்தல், 233ஆயிரம் டாலருக்கு விற்பனையானது.  

Top