Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரர்களில் அதிகமானோர் வீட்டில் இறக்க விரும்புகின்றனர்: IPS ஆய்வு

சிங்கப்பூரர்களில் 77 விழுக்காட்டினர் வாழ்வின் இறுதிக்கட்டத்தின்போது வீட்டில் இறக்கவே விரும்புகின்றனர்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரர்களில் அதிகமானோர் வீட்டில் இறக்க விரும்புகின்றனர்: IPS ஆய்வு

(படம்: AFP)

சிங்கப்பூரர்களில் 77 விழுக்காட்டினர் வாழ்வின் இறுதிக்கட்டத்தின்போது வீட்டில் இறக்கவே விரும்புகின்றனர்.

ஆனால் 24 விழுக்காட்டினரால் மட்டுமே அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது.

உண்மை நிலவரப்படி 70 விழுக்காட்டினர் மருத்துவமனைகளிலும் பராமரிப்பு இல்லங்களிலும் கடைசிக் காலத்தைக் கழிக்கின்றனர்.

கொள்கை ஆய்வுக் கழகம் இன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அது தொடர்பாக, மூப்படையும் சமூகத்தில் அந்திமக் காலம் குறித்த திட்டமிடலை எளிமையாக்கும் சில வழிகளைக் கழகம் முன்வைத்தது.

1. Advance Care Planning எனும் மேம்பட்ட பராமரிப்புத் திட்டமிடலுக்கான பல்வேறு ஆவண முறைகளை ஒருங்கிணைக்கலாம். இது அந்திமக் காலத் திட்டமிடலை எளிமையாக்கும்.

2. மூத்தோரின் சார்பில் செயல்பட நிர்ணயிக்கப்படுவோருக்குச் சட்டபூர்வ அதிகாரத்தைத் தற்காலிகமாக வழங்குவதற்குப் பதிலாக நீண்ட காலத்துக்குக் கொடுக்கலாம்.

3. மனநலம் பாதிக்கப்படுவதற்கு முன் தனது சார்பில் செயல்படத் தனிநபர் ஒருவரை நியமிக்கலாம். அல்லது அவரின் சார்பில் ஒருவரை நீதிமன்றம் நியமிக்கலாம். வருங்காலத்தில் இன்னும் கூடுதலான நிபுணர்களுக்கு இது தொடர்பான பயிற்சிகளை வழங்க முயற்சிகள் எடுக்கலாம்.

4. மேம்பட்ட பராமரிப்புத் திட்டமிடல் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்குக் கூடுதலான சமூக நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

5. வேலையிடத்திலும் பொது இடங்களிலும் கூடுதலான கலந்துரையாடல்களுக்கும் ஏற்பாடு செய்யலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்