Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வொல்பாக்கியா கொசுக்களைப் பயன்படுத்தும் ஆய்வு நீ சூன், தம்பனீஸ் வட்டாரங்களில் விரிவாக்கம்

வொல்பாக்கியா (Wolbachia) கிருமியைக் கொண்ட ஆண் கொசுக்கள் நீ சூன், தம்பனீஸ் வட்டாரங்களில் பெரியளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

வாசிப்புநேரம் -
வொல்பாக்கியா கொசுக்களைப் பயன்படுத்தும் ஆய்வு நீ சூன், தம்பனீஸ் வட்டாரங்களில் விரிவாக்கம்

(படம்: Angela Lim)

(வாசிப்பு நேரம்: 2 நிமிடத்திற்குள்)

வொல்பாக்கியா (Wolbachia) கிருமியைக் கொண்ட ஆண் கொசுக்கள் நீ சூன், தம்பனீஸ் வட்டாரங்களில் பெரியளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

டெங்கிக் காய்ச்சல் போன்ற நோய்களைப் பரவச் செய்யும் ஏடிஸ் (Aedes) கொசுக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆய்வின் மூன்றாம் கட்டம் இது.

இரண்டாம் கட்டத்தின்போது நீ சூனில் கொசுக்கள் அறிமுகம் செய்யப்பட்ட வட்டாரத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை 1.6 மடங்கு அதிகப் பரப்பளவில் அவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த முறை தம்பனீஸ் வெஸ்ட்டில் கொசுக்கள் பயன்படுத்தப்பட்ட வட்டாரத்தைக் காட்டிலும் இம்முறை அவை பயன்படுத்தப்பட்ட வட்டாரம் 2.2 மடங்கு பெரியது.

வொல்பாக்கியா (Wolbachia) கிருமியைக் கொண்ட ஆண் கொசுக்களை அறிமுகம் செய்வதன்மூலம் ஏடிஸ் கொசுக்கள் குறையும் போக்கு பெரிய வட்டாரங்களுக்கும் பொருந்துமா என்பதைக் கண்டுபிடிப்பது இந்தமுறை ஆய்வின் நோக்கம்.

2018 ஏப்ரல் மாதத்திற்கும் 2019 ஜனவரி மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட ஆய்வின்போது வொல்பாக்கியா கொசுக்களை அறிமுகம் செய்ததால் நீ சூன் ஈஸ்ட்டிஸ் கொசுக்களின் எண்ணிக்கை 80 விழுக்காடு குறைந்தது.

தம்பனீஸ் வெஸ்ட் வட்டாரத்தில் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு குறைந்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்