Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முன்னாள் முதலாளியின் கடன்பற்று அட்டையைக் கொண்டு Foodpandaவில் உணவு வாங்கிய பெண்ணுக்குச் சிறை

முன்னாள் முதலாளியின் கடன்பற்று அட்டை விவரங்களைக் கொண்டு, Foodpanda உணவு விநியோகச் சேவையிலிருந்து 2,200 வெள்ளி மதிப்பிலான உணவுப் பொருள்களை வாங்கிய பெண்ணுக்கு 5 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

வாசிப்புநேரம் -
முன்னாள் முதலாளியின் கடன்பற்று அட்டையைக் கொண்டு Foodpandaவில் உணவு வாங்கிய பெண்ணுக்குச் சிறை

கோப்புப் படம்: TODAY

முன்னாள் முதலாளியின் கடன்பற்று அட்டை விவரங்களைக் கொண்டு, Foodpanda உணவு விநியோகச் சேவையிலிருந்து 2,200 வெள்ளி மதிப்பிலான உணவுப் பொருள்களை வாங்கிய பெண்ணுக்கு 5 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மோசடி செய்த குற்றத்தை, 41 வயது லின் சியென் டாய் லின் (Lin Qian Dai Lin) ஒப்புக்கொண்டார்.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அவர் Nippecraft நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளராக வேலை செய்தார்.

 அப்போது, தனது முதலாளியின் கடன்பற்று அட்டையைக் கொண்டு, முதலாளிக்குத் தேவையான பொருள்களை லின் வாங்கி வந்தார்.

அந்த வேலையிலிருந்து விலகிய பின்னும், லின் தனது முன்னாள் முதலாளியின் கடன்பற்று அட்டை விவரங்களைத் தனது கைத்தொலைபேசியிலிருந்து அழிக்கவில்லை.

அதைக் கொண்டு, அவர் 73 முறை Foodpandaவில் உணவு வாங்கியிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட நபர், சென்ற ஆண்டு அக்டோபரில் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

லின் பணத்தைத் திருப்பிக் கொடுத்ததோடு, மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

மோசடி செய்ததற்கு, அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்