Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

திறந்த சாக்கடைக்குள் விழுந்த மாது - 5 மில்லியன் வெள்ளி இழப்பீடு கோரி PUB மீது வழக்கு

நடைபாதையில் இருந்த திறந்த சாக்கடைக்குள் விழுந்து காயமுற்ற மாது 5 மில்லியன் வெள்ளி இழப்பீடு கேட்டு பொதுப் பயனீட்டுக் கழகம் மீது  வழக்குத் தொடுத்துள்ளார். 

வாசிப்புநேரம் -

நடைபாதையில் இருந்த திறந்த சாக்கடைக்குள் விழுந்து காயமுற்ற மாது 5 மில்லியன் வெள்ளி இழப்பீடு கேட்டு பொதுப் பயனீட்டுக் கழகம் மீது வழக்குத் தொடுத்துள்ளார்.

2015ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று, 47 வயது திருவாட்டி சான் ஹுய் பெங், சைமன் ரோட்டில் நடந்துகொண்டிருந்தார். அப்போது அப்பர் சிராங்கூன் ரோடு சந்திப்பில் இருந்த திறந்த சாக்கடைக்குள் அவர் விழுந்தார்.

அதன் காரணமாக அவர் உடலில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டன. மேலும், அவரால் ஓடவோ, நேராக நடக்கவோ முடியவில்லை. நரம்பு சேதமடைந்ததால் வலது கையையும் சரியாகப் பயன்படுத்த முடியவில்லை.

அந்தச் சம்பவத்தின் காரணமாக மன அழுத்தம், திடீர் பீதி, ஸ்கிட்ஸோபிரேனியா (schizophrenia) எனும் மனநோய் போன்றவற்றால் தாம் பாதிக்கப்பட்டதாகத் திருவாட்டி சான் குறிப்பிட்டார்.

சம்பவத்திற்குக் கழகம் ஏற்கனவே 70 விழுக்காட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக அவரது வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், எதிர்கால மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி தற்போது நீதிமன்றத்தில் வாதாடப்படுகிறது.

அதன் தொடர்பில், அவர் 5 மில்லியன் வெள்ளி இழப்பீடு கேட்டுள்ளார்.

ஆனால் கழகம், அதன் அதிகாரிகள் சம்பவம் நடந்த நாளன்று அந்தச் சாக்கடையைச் சோதித்துக்கொண்டிருந்ததாகத் தெரிவித்தது.

திருவாட்டி சான் அவர்களைச் சுற்றிச் செல்வதற்குப் பதிலாக நேரே நடந்ததாகவும் கழகம் சொல்லிற்று.

திறந்த சாக்கடையைத் தாண்டிச் செல்ல முயன்ற போது அவர் அதன் உள்ளே விழுந்தார் என்றும் கழகத்தின் வழக்குரைஞர் தெரிவித்தார்.

வழக்கு தொடர்கிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்