Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உரிமம் இல்லாமல் வர்த்தகம் நடத்தியதன் தொடர்பில் பெண் ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்

உரிமம் இல்லாமல் வர்த்தகம் நடத்திவந்ததன் தொடர்பில் சிங்கப்பூரரான 38 வயதுப் பெண் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்படும். 

வாசிப்புநேரம் -

உரிமம் இல்லாமல் வர்த்தகம் நடத்திவந்ததன் தொடர்பில் சிங்கப்பூரரான 38 வயதுப் பெண் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்படும்.

அந்தப் பெண் சென்ற மே மாதம் 13 முறை சட்டவிரோதமாக உள்ளூர் பணமாற்றுச் சேவைகளை வழங்கியதாகப் புலனாய்வுகளில் தெரிய வந்தது.

அதற்காக அவரது வங்கிக் கணக்கிற்கு மோசடியான முறையில் 4,000 வெள்ளிக்கும் அதிகமான தொகை மாற்றிவிடப்பட்டிருந்தது.

இணையத்தில் விளம்பரம் செய்யப்பட்டிருந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ததாகவும் வங்கிப் பணமாற்றுச்
சேவைகளை வழங்க கணக்குத் துறை ஊழியராக வேலைக்கு அமர்த்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வேலையில் அன்றாடப் படித்தொகை அளிக்கப்படும் என்றும் தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அவருக்கு அனுப்பப்பட்ட பணம், இணைய மோசடிகள் மூலம் பெறப்பட்டதாக நம்பப்படுகிறது.

அவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 125,000 வெள்ளி வரையிலான
அபராதமோ, 3 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையோ, இரண்டுமோ விதிக்கப்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்