Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிக பெண் தலைமை நிர்வாக அதிகாரிகள் - சிங்கப்பூர், இத்தாலிக்கு முதலிடம்

சிங்கப்பூரிலும் இத்தாலியிலும், அதிகமான பெண் தலைமை நிர்வாக அதிகாரிகள் நிறுவனங்களில் பொறுப்பு வகிக்கின்றனர்.

வாசிப்புநேரம் -
அதிக பெண் தலைமை நிர்வாக அதிகாரிகள் - சிங்கப்பூர், இத்தாலிக்கு முதலிடம்

(படம்: Thinkstock)

சிங்கப்பூரிலும் இத்தாலியிலும், அதிகமான பெண் தலைமை நிர்வாக அதிகாரிகள் நிறுவனங்களில் பொறுப்பு வகிக்கின்றனர்.

அது குறித்து நடத்தப்பட்ட CS Gender 3000 எனும் ஆய்வில் இரு நாடுகளும் முதலிடத்தை பிடித்துள்ளன.

இரு நாடுகளிலுமுள்ள நிறுவனங்களில் 15 விழுக்காட்டு நிறுவனங்களைப் பெண் தலைமை நிர்வாக அதிகாரிகள் வழிநடத்துகின்றனர்.

ஒப்புநோக்க தாய்லந்தில் 9 விழுக்காட்டு நிறுவனங்களில் பெண் தலைமை நிர்வாக அதிகாரிகள் பொறுப்பு வகிக்கின்றனர்.

பிலிப்பீன்ஸில் அந்த விகிதம் 8 விழுக்காடு.

56 நாடுகளிலுள்ள 3,000க்கும் மேலான நிறுவனங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

பொதுவான நிர்வாகப் பொறுப்புகளை வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை தொடர்பிலும் ஆய்வு கவனம் செலுத்தியது.

23 விழுக்காட்டு நிர்வாக பொறுப்புகளை பெண்கள் வகிப்பதால், சிங்கப்பூர் ஆறாவது இடத்தைப் பிடித்தது.

பிலிப்பீன்ஸ், தாய்லந்து, சுவீடன் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்