Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மாதர் விவகாரங்கள் பற்றிய வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

சிங்கப்பூரில் மாதர் விவகாரங்கள் பற்றிய வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இந்த ஆண்டு பிற்பாதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் மாதர் விவகாரங்கள் பற்றிய வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இந்த ஆண்டு பிற்பாதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முற்பாதியில் அது தாக்கல் செய்யப்படும் என்று முன்னதாகக் கூறப்பட்டிருந்தது.

அறிக்கைக்கான பரிந்துரைகளைச் சேகரிப்பதற்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகச் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.

மக்களின் கருத்துகளைத் திரட்ட மேலும் சுமார் 100 கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மாதர் விவகாரங்கள் பரிசீலனை 4 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.

அதற்கான கலந்துரையாடல்களில் 1,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அவர்களில் சுமார் கால்வாசியினர் ஆண்கள்.

கல்வி, வேலையிடம், வீடு, சமூகம் ஆகியவை பெண்கள் மேம்பாட்டுக்கான அம்சங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றி ஆக அதிகமான அக்கறைகள் முன்வைக்கப்பட்டன.

கருத்துகளைத் திரட்டுவதில் கூடுதல் முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்றார் அமைச்சர் சண்முகம்.

இளைய தலைமுறையினரின் கண்ணோட்டமும் அதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றார் அவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்