Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உட்லண்ட்ஸ் இரட்டைக் கொலை: கருவுற்றிருந்த மனைவியையும் மகளையும் கொன்றதால் மரண தண்டனையை எதிர்நோக்கும் ஆடவர் மேல் முறையீடு

உட்லண்ட்ஸ் இரட்டைக் கொலை: கருவுற்றிருந்த மனைவியையும் மகளையும் கொன்றதால் மரண தண்டனையை எதிர்நோக்கும் ஆடவர் மேல் முறையீடு

வாசிப்புநேரம் -

கர்ப்பிணியாக இருந்த மனைவியையும் 4 வயது மகளையும் கழுத்தை நெரித்துக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆடவர் அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்திருக்கிறார்.

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 45 வயது தியோ கிம் ஹெங் (Teo Ghim Heng) உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் அவரின் வீட்டில் அந்தக் கொடூரக் கொலைகளைச் செய்தார்.

6 மாதக் கர்ப்பிணியாக இருந்த 39 வயது மனைவியுடன் பணப் பிரச்சினை காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார் தியோ. பின்னர் மனைவியின் கழுத்தை ஒரு துண்டைக்கொண்டு நெரித்தார். மகளையும் கொன்றுவிட்டு தம்மையும் மாய்த்துக்கொள்ள நினைத்தார்.

மகளைக் கொன்ற அவர், இரு சடலங்களையும் படுக்கையில் கிடத்தி, 7 நாள் தூங்கினார். அதன் பிறகு தற்கொலை செய்துகொள்ளப் பல முறை முயன்றார் தியோ. இறுதியில் இரு சடலங்களையும் அவர் தீயிட்டுக் கொளுத்தினார்.

அதிகபட்ச தண்டனையாக தியோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அது குறித்து அவர் மேல்முறையீடு செய்யக் கோரினார்.

சம்பவம் நடந்த காலக்கட்டத்தில் தியோவுக்குக் கடன் பிரச்சினை, வேலை தொடர்பிலான பிரச்சினைகள், மகளின் பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாத நிலை எனப் பல பிரச்சினைகள் இருந்ததாக அவரின் வழக்குரைஞர், மேல் முறையீட்டு வழக்கு விசாரணையில் வாதிட்டார்.

அத்துடன் தியோ, அவரின் மனைவி, மகள் மீது அதிக அன்பு வைத்திருந்ததும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஐவர் கொண்ட நீதிபதிக் குழு மேல்முறையீட்டை விசாரிக்கிறது. இறுதித் தீர்ப்பு பின்னொரு தேதியில் வெளியிடப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்