Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உட்லண்ட்ஸ் ரோட்-மண்டாய் எஸ்டேட் சந்திப்பில் விபத்து - இருவர் மாண்டனர்

உட்லண்ட்ஸ் ரோட்-மண்டாய் எஸ்டேட் (Mandai Estate) சந்திப்பில் நடந்த விபத்தில் இருவர் மாண்டனர். 2 மோட்டார் சைக்கிள்களும், லாரியும் சம்பந்தப்பட்ட விபத்து பற்றிக் காலை மணி 7.50 அளவில் தகவல் கிடைத்ததாய்க் காவல்துறை தெரிவித்தது.

வாசிப்புநேரம் -

மோட்டார்சைக்கிளோட்டியான 53 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக மருத்துவ உதவியாளர்கள் அறிவித்தனர்.

லாரியை ஓட்டிய ஆடவர் நினைவிழந்த நிலையில் கூ தெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். மருத்துவமனையில் அவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு மோட்டார்சைக்கிளோட்டி மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாக, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை CNAவிடம் தெரிவித்தது. மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட நீல நிற லாரியின் வலப்புறப் பின் சக்கரத்திற்குக் கீழ் ஆடவர் ஒருவர் சிக்கியிருப்பதை சமூக ஊடகப் படங்கள் காட்டுகின்றன.
சம்பவம் குறித்து விசாரணை தொடர்வதாகக் காவல்துறை கூறியது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்