Images
  • AWARE
    (படம்: Chan Luo Er/ CNA)

வசதிகுறைந்த பெண்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுபட AWARE பரிந்துரைகள்

சிங்கப்பூரில், வசதிகுறைந்த பெண்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுபெற, AWARE எனும் மகளிருக்கான நடவடிக்கை, ஆய்வு அமைப்பு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

2,500 வெள்ளிக்கும் குறைவாக மாத வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இலவசக் குழந்தை பராமரிப்புச் சேவை வழங்குவது, ComCare சமூக நலன் திட்டத்தை மேம்படுத்துவது போன்றவை பரிந்துரைகளில் அடங்கும்.

நிரந்தரமற்ற வேலையில் இருக்கும் ஊழியர்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்துவதும் அவற்றில் அடங்கும்.

வேலை தேடிவரும், குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த 47 தாய்மார்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து, AWARE அமைப்பு பரிந்துரைகளை முன்வைத்தது.

Top