Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆசிரியர்கள், பொது, தனியார்த் துறைகளில் திறன்களை வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள்

ஆசிரியர்கள், பொது, தனியார்த் துறைகளில் திறன்களை வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் அளிக்கப்படவுள்ளன.

வாசிப்புநேரம் -

ஆசிரியர்கள், பொது, தனியார்த் துறைகளில் திறன்களை வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் அளிக்கப்படவுள்ளன.

நீடித்த நிலைத்தன்மை, மின்-வணிகம் உள்ளிட்ட துறைகளில், அத்தகைய சுமார் 150 வாய்ப்புகள் அடுத்த ஆண்டுமுதல் வழங்கப்படும்.

ஆசிரியர்களின் கற்றல் பயணத்தில் உறுதுணையாக இருப்பதற்குத் திட்டம் வகைசெய்யும் என்றார் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing).

இதன்வழி, ஆசிரியர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதுடன், மற்றவர்களையும் புதியனவற்றைக் கற்றுக்கொள்ளுமாறு ஊக்குவிக்கத் தயாராக இருப்பார்கள் என்றார் அவர்.

பள்ளி முதல்வர்களை நியமிக்கும் நிகழ்ச்சியில் திரு. சான் பேசினார்.

இன்றைய நிகழ்ச்சியில் 59 பேர் பள்ளி முதல்வர்களாக நியமிக்கப்பட்டனர்.

அவர்களில் 24 பேர், முதன்முறையாகப் பள்ளி முதல்வராகப் பொறுப்பேற்கின்றனர்.

முதல்வர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவது அவசியம் என்று திரு. சான் வலியுறுத்தினார்.

பள்ளிகளில் வழங்கப்படும் தனித்துவமிக்க திட்டங்களின் வழி, அவை ஓர் அடையாளத்தையும் வலுவான கலாசாரத்தையும் உருவாக்கிக்கொள்ள அது உதவும் என்றார் அவர்.

மாணவர்களின் பலம், விருப்பம் முதலியவற்றை அடையாளங்காண, பாடங்கள், நடவடிக்கைகள் மூலம் ஆசிரியர்கள் உதவுவதும் முக்கியம் என்று அமைச்சர் சான் வலியுறுத்தினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்