Images
  • laptop work
    (படம்: Pixabay/kropekk_pl)

வீட்டிலிருந்து வேலைசெய்யும் நடைமுறை தொடரும் - இப்போது போலவே

இரண்டாம் கட்டம் (உயர்த்தப்பட்ட விழிப்புநிலை) தளர்த்தப்படும் வேளையில், வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை தொடர்ந்து வழக்கநிலையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் அவ்வாறு தொடர்வதை முதலாளிகள் உறுதிசெய்ய வேண்டும்.

வேலையிடங்களுக்குச் செல்லும் ஊழியர்களுக்கு, வெவ்வேறு நேரத்தில் வேலை ஆரம்பிக்கும் நடைமுறை தொடர்ந்து நடப்பில் இருக்கவேண்டும்.

ஊழியர்களுக்கு நீக்குப்போக்கான பணிநேரமும் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

வேலையிடங்களிலும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும், கிருமிப்பரவல் அபாயத்தைக் குறைக்க அந்த நடவடிக்கைகள் தேவை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

Top