Images
  • wfh
    (படம்: Pixabay)

வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை தொடரும்

சிங்கப்பூரில் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை தொடரும்.

இரண்டாம் கட்ட அதிகரிக்கப்பட்ட விழிப்புநிலை நடப்பில் இருக்கும் வேளையில், முதலாளிகள், வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய ஊழியர்களை அவ்வாறு செய்ய அனுமதிக்கவேண்டும் என்றது சுகாதார அமைச்சு.

வேலையிடங்களில் வேலை செய்யத் தேவைப்படுவோரிடம் அதற்கான காரணங்களை முதலாளிகள் தெளிவாகத் தெரியப்படுத்துவது அவசியம் என்றும் அமைச்சு வலியுறுத்தியது.

வேலையிடங்களில் பணி செய்யும் ஊழியர்களுக்கு இடையில் குறைந்தது 1 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும்.

முதலாளிகள், வெவ்வேறு வேலையிடங்களுக்கு அதே ஊழியர்கள் செல்வதைக் கட்டாயமாகத் தவிர்க்கவேண்டும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

வேலையிடங்களில் பணி செய்யவேண்டிய ஊழியர்களின் வேலை தொடங்கும் நேரங்களை வித்தியாசப்படுத்துவது முதலாளிகளின் பொறுப்பு.

அதோடு, வேலையிடங்களில் ஒன்றுகூடல்கள் அனுமதிக்கப்பட மாட்டா.  

Top