Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேலை - வாழ்க்கைச் சமநிலையை எப்படி அடைவது என்பது பற்றிய கலந்துரையாடல்

சிங்கப்பூரின் வேகமான பணிச் சூழலில், வேலை - வாழ்க்கைச் சமநிலையை அடைவது எவ்வாறு? என்பது பற்றிய கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

வாசிப்புநேரம் -
வேலை - வாழ்க்கைச் சமநிலையை எப்படி அடைவது என்பது பற்றிய கலந்துரையாடல்

கோப்புப் படம்: Reuters

சிங்கப்பூரின் வேகமான பணிச் சூழலில், வேலை - வாழ்க்கைச் சமநிலையை அடைவது எவ்வாறு? என்பது பற்றிய கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

குடிமக்கள் ஆலோசனை குழு முதன்முறை நடத்திய அந்தக் கலந்துரையாடலில் ஐம்பதுக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

வேலை - வாழ்க்கைச் சமநிலையை எட்டுவதற்கு, சமூக நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.

அதற்கேற்ப அனைவரின் கருத்துக்களையும் திரட்டுவது கலந்துரையாடலின் நோக்கம்.

வேலை - வாழ்க்கைச் சமநிலையை அடைய எவ்வாறு பங்காற்றலாம் என்பதில் கவனம் செலுத்தப்பட்டதாகத் திருமதி தியோ கூறினார்.

நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள், வேலையிட கலாசாரத்தில் மாற்றங்கள் செய்வது போன்ற அம்சங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்