Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தடுப்பூசி போடுபவர்களுக்குச் சம்பளம் வழங்கத் தவறிய நிறுவனத்தின் வேலை அனுமதிச் சலுகைகள் தற்காலிக ரத்து

COVID-19 தடுப்பூசி நிலையத்தில் தடுப்பூசி போடுபவர்களுக்குச் சம்பளம் வழங்கத் தவறிய Singapore Ambulance Association நிறுவனம், அதனுடன் தொடர்புடைய வர்த்தகங்கள், நபர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
தடுப்பூசி போடுபவர்களுக்குச் சம்பளம் வழங்கத் தவறிய நிறுவனத்தின் வேலை அனுமதிச் சலுகைகள் தற்காலிக ரத்து

(கோப்புப் படம்: Nuria Ling/TODAY)

COVID-19 தடுப்பூசி நிலையத்தில் தடுப்பூசி போடுபவர்களுக்குச் சம்பளம் வழங்கத் தவறிய Singapore Ambulance Association நிறுவனம், அதனுடன் தொடர்புடைய வர்த்தகங்கள், நபர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

விசாரணை அடிப்படையில், யூஜீன் டொக் யோங் ஃபா (Eugene Tok Yong Fa), வே சென் ஹுவே (Whey Zhen Hui) ஆகியோர் தவற்றுக்குப் பொறுப்பேற்பர் என்று அமைச்சும் பூசல் தீர்க்கும் நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணியும் (TADM) கூறியது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வேலை அனுமதிச் சலுகைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என அமைச்சு CNA-யிடம் குறிப்பிட்டது.

டாக்டர் டான் யிங் சோ மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அது சொன்னது.

சம்பளம் கொடுக்கப்படாத 15 பேருடன் ஜூலை மாதத்திலிருந்து முத்தரப்புக் கூட்டணி தொடர்பில் உள்ளது.

Singapore Ambulance Association நிறுவனத்திற்குச் செப்டம்பர் 11ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டதாக அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

ஆனால், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் கொடுக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட 15 பேருக்கு நல்லெண்ண அடிப்படையில் Parkway Shenton சுகாதாரப் பராமரிப்பு நிறுவனம் சம்பளம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-CNA/dv(gr)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்