Images
  • Dead
    படம்: Facebook/Land Transport Authority

2018ஆம் ஆண்டு வேலையிட மரணங்கள் குறைந்துள்ளன

சிங்கப்பூரில் 2018ஆம் ஆண்டில் வேலையிட மரணங்கள் குறைந்துள்ளதாக மனிதவள அமைச்சின் வேலையிடப் பாதுகாப்பு சுகாதார அறிக்கை தெரிவித்திருக்கிறது.

கடந்த ஆண்டில் 41 பேர் வேலையிடத்தில் மாண்டதாகவும் அது 2017ஆம் ஆண்டை விடக் குறைவு என்றும் அது குறிப்பிட்டது.

எனினும் வேலையிடத்தில் நடக்கும் விபத்துகளில் காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகமானதாகவும் அறிக்கை கூறியது. சென்ற ஆண்டு வேலையிடத்தில் 12,800 பேர் காயமடைந்தனர்.

அதிகமானோர் காயமைடந்தது கவலைக்குரியது என்று மனித வளத் துணையமைச்சர் ஸாக்கி முகமது கூறினார்.

உயரத்தில் இருந்து கீழே விழுதல், தவறி விழுதல், வாகனம் தொடர்பான விபத்துச் சம்பவங்கள் போன்றவை வேலையிட விபத்துகளில் அதிகமானோர் காயமடைவதற்குக் காரணமாக இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வேலையிட மரணங்கள் கட்டுமானத் துறையில் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

Top