Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் ஊதியத்தையும் நலனையும் மேம்படுத்துவது குறித்து ஆராய்வதற்குப் புதிய முத்தரப்புப் பணிக்குழு

சிங்கப்பூரில் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் ஊதியத்தையும் நலனையும் மேம்படுத்துவது குறித்து ஆராய, முத்தரப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் ஊதியத்தையும் நலனையும் மேம்படுத்துவது குறித்து ஆராய, முத்தரப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மனிதவளத்திற்கான மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது (Zaqy Mohamad) குழுவுக்குத் தலைமையேற்பார்.

சிங்கப்பூர்த் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் துணைத்தலைவர் திரு. டக்லஸ் ஃபூ (Douglas Foo) முதலாளிகள் பிரிவின் தலைவராகவும் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் துணைத் தலைமைச் செயலாளர் கோ போ கூன் (Koh Poh Koon), ஊழியர்கள் பிரிவின் தலைவராகவும் பொறுப்பு வகிப்பார்கள்.

குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களுக்கு மேலும் ஆதரவளிக்க, முத்தரப்புப் பங்காளிகள் இணைந்து பணியாற்றுவர்.

புதிய பணிக்குழு, தொழிற்சங்கங்கள், முதலாளிகள் ஆகியோருடன் கலந்து ஆலோசிப்பதுடன் சமூகத்தின் கருத்துகளையும் பெறும்.

அதன் இடைக்கால முன்னேற்றங்கள் குறித்து, பணிக்குழு அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022-ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள், அதன் பணி முடிவடையும் என்று நம்பப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்