Images
  • hou
    படம்: Google Maps

கட்டுமானத் தளத்தில் எஃகுப் பலகை விழுந்து ஊழியர் மரணம் - மனிதவள அமைச்சு விசாரணை

ஹவ்காங்கில் கட்டுமானத் தளத்தில் எஃகுப் பலகை விழுந்ததால் ஊழியர் மாண்ட சம்பவம் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை செய்துவருவதாகக் கூறியிருக்கிறது.

மாண்ட 25 வயது ஆடவர் பங்களாதேஷைச் சேர்ந்தவர்.

ஹவ்காங் அவென்யூ 2 இல் உள்ள கூட்டுரிமை வீட்டுக் கட்டுமானத் தளத்தில் நேற்று முன்தினம் அந்த ஆடவர் மீது எஃகுப் பலகை விழுந்தது குறித்துத் தகவலளிக்கப்பட்டதாய் மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.

சொத்து மேம்பாட்டு நிறுவனமான Florence Developerக்குச் சொந்தமான இடத்தில், Tiong Aik Construction எனும் கட்டுமான நிறுவனம் வேலை மேற்கொண்டிருந்தது.

மாண்ட ஆடவரை Dsoon Engineering நிறுவனம் வேலைக்கு அமர்த்தியிருந்தது.

சம்பவம் குறித்து விசாரித்துவருவதாகவும் அந்த வேலையிடத்தில் கனரக இயந்திரங்களின் இயக்கத்தை நிறுத்திவைத்திருப்பதாகவும் அமைச்சு கூறியது.

Top