Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் இம்மாத இறுதிக்குள் வேலைக்குத் திரும்புவார்கள்: அமைச்சர் லாரன்ஸ் வோங்

பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் இம்மாத இறுதிக்குள் வேலைக்குத் திரும்புவார்கள்: அமைச்சர் லாரன்ஸ் வோங் 

வாசிப்புநேரம் -

பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் இம்மாத இறுதிக்குள் வேலைக்குத் திரும்புவார்கள் என்று அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

இன்று நடந்த COVID-19 நோய்த்தொற்றுக்கான அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் அந்தத் தகவலை அவர் வெளியிட்டார்.

கட்டுமானப் பணிகளும் மாத இறுதிக்குள் மீண்டும் தொடங்கும் என்றார் அவர்.

கட்டுமானத் தளங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வோங் கூறினார்.

நாளைக்குள் சுமார் 300,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு COVID-19 மருத்துவ சோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்படும் காலம் முடிவடையும் தறுவாயில் ஊழியர்கள் மீண்டும் சோதிக்கப்படுவார்கள் என்பதால் அடுத்த இரு வாரங்களில் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை உயரலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வேலைக்குத் திரும்பும் ஊழியர்களுக்கு 2 வாரங்களுக்கு ஒரு முறை மருத்துவச் சோதனை நடத்தப்படும் என்று அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்