Images
  • shoips
    படம்: Gaya Chandramohan

COVID-19: குணமடைந்த சுமார் 3000 வெளிநாட்டு ஊழியர்கள் 2 சொகுசுக் கப்பல்களில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்

சிங்கப்பூரில், COVID-19 நோயிலிருந்து குணமடைந்த சுமார் 3000 வெளிநாட்டு ஊழியர்கள் கெந்திங் நிறுவனத்தின்
2 சொகுசுக் கப்பல்களில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

SuperStar Gemini, SuperStar Aquarius எனும் அந்த 2 சொகுசுக் கப்பல்களில், கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஏதும் இல்லாவிட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உடல் நலமில்லாத ஊழியர்களுக்குச் சிகிச்சை வழங்குவதற்காக மரினா பே சொகுசுக் கப்பல் நிலையத்தில் சிறப்பு அறை நிறுவப்பட்டுள்ளது.

அங்கு, Raffles மருத்துவக் குழுமத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளில் முடக்கநிலை தளர்த்தப்பட்டவுடன், ஜூலை மாதவாக்கில் சொகுசுக் கப்பல் சேவைகளை மீண்டும் தொடங்க கெந்திங் நிர்வாகம் திட்டமிடுகிறது.

தற்போது அதிகாரிகளுடன் அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அது தெரிவித்தது.

அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுப்பயணத் துறையை வழக்கநிலைக்குக் கொண்டுவர அது முக்கியம் என்று நிறுவனம் கருதுகிறது.

நாடுகளுக்குச் செல்லாமல், சொகுசுக் கப்பலில் மட்டும் தங்கும் அனுபவங்களை வழங்கும் முயற்சிகளில் நிறுவனம் தற்போது கவனம் செலுத்திவருகிறது.
 

Top