Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டு ஊழியர்களில் பத்தில் ஒன்பது பேருக்கு, சிங்கப்பூரில் வேலை செய்வதில் மனநிறைவு

வெளிநாட்டு ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கும் முயற்சிகளில் முதலாளிகளோடும் அரசாங்கச் சார்பற்ற அமைப்புகளோடும் அணுக்கமாய் ஒத்துழைத்து வருவதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது. 

வாசிப்புநேரம் -
வெளிநாட்டு ஊழியர்களில் பத்தில் ஒன்பது பேருக்கு, சிங்கப்பூரில் வேலை செய்வதில் மனநிறைவு

(படம்: Sutrisno Foo))

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களில் சுமார் 10இல் 9 பேர், இங்கு வேலை செய்வது குறித்து மனநிறைவு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மனிதவள அமைச்சு நடத்திய வெளிநாட்டு ஊழியர் அனுபவம் தொடர்பிலான கருத்தாய்வில் அது தெரியவந்துள்ளது.

2014ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கருத்தாய்வு முடிவுகளைக் காட்டிலும் கடந்த ஆண்டின் முடிவுகள் சற்றுக் குறைவே.

3ஆம் முறையாக மேற்கொள்ளப்படும் அந்தக் கருத்தாய்வில் வெளிநாட்டு ஊழியர்கள் சுமார் 3,000 பேர் பங்கேற்றனர்.

அவர்களில் சுமார் 2,500 பேர் வேலை அனுமதி அட்டை பெற்றவர்கள். 500 பேர் S Pass அனுமதியின்கீழ் பணிபுரிவோர்.

சிறந்த ஊதியம், தரமான வசிப்பிடம், பாதுகாப்பு போன்ற அமசங்கள் அவர்களது மனநிறைவுக்கான முக்கியக் காரணங்கள்.

சிங்கப்பூர் வேலை பார்க்க ஒரு சிறந்த இடமெனத் தங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் பரிந்துரைக்க, 10இல் 9 பேர் தயாராக உள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கும் முயற்சிகளில் முதலாளிகளோடும் அரசாங்கச் சார்பற்ற அமைப்புகளோடும் அணுக்கமாய் ஒத்துழைத்து வருவதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

இந்நிலையில், வெளிநாட்டு ஊழியர் நிலையம், அதன் முதல் இலவசப் பொழுதுபோக்குச் சங்கத்தை, சூன் லீ ரோட்டில் அமைத்துள்ளது.

வாரந்தோறும் சுமார் 15,000 ஊழியர்கள் சங்கத்தின் வசதிகளைப் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்