Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேலை அனுமதிக்கான மாற்றங்கள் பணித் திட்டங்களைப் பாதிக்காது: சிங்கப்பூரில் செயல்படும் அனைத்துலக நிறுவனங்கள்

சிங்கப்பூரில் செயல்படும் அனைத்துலக நிறுவனங்கள் சில, ஏற்கனவே உள்ளூர்வாசிகளை அதிகமாய் வேலைக்கு அமர்த்தியிருப்பதால், அரசாங்கம் வெளிநாட்டு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பள வரம்பை உயர்த்தியது தங்கள் பணித் திட்டங்களைப் பாதிக்காது என்று கூறியுள்ளன.

வாசிப்புநேரம் -
வேலை அனுமதிக்கான மாற்றங்கள் பணித் திட்டங்களைப் பாதிக்காது: சிங்கப்பூரில் செயல்படும் அனைத்துலக நிறுவனங்கள்

(படம்: Reuters/Edgar Su)

சிங்கப்பூரில் செயல்படும் அனைத்துலக நிறுவனங்கள் சில, ஏற்கனவே உள்ளூர்வாசிகளை அதிகமாய் வேலைக்கு அமர்த்தியிருப்பதால், அரசாங்கம் வெளிநாட்டு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பள வரம்பை உயர்த்தியது தங்கள் பணித் திட்டங்களைப் பாதிக்காது என்று கூறியுள்ளன.

நிபுணத்துவம் அல்லது குறிப்பிட்ட மொழியில் திறன் தேவைப்படும்போது மட்டுமே வெளிநாட்டு ஊழியர்களை நாடுவதாக அவை தெரிவித்தன.

சிங்கப்பூரில் 20 துணை நிறுவனங்களைக் கொண்டிருக்கும் Tata Sons நிறுவனம், சில வேலைகளுக்குச் சிங்கப்பூரர்கள் கிடைப்பது கடினமாய் இருக்கும்போது வெளிநாட்டினரை அமர்த்துவதாகக் கூறியது.

தனது துணை நிறுவனங்களில் பெரும்பாலும் சிங்கப்பூரர்களும், நிரந்தரவாசிகளுமே பணிபுரிவதாக அது குறிப்பிட்டது.

Thermo Fisher Scientific நிறுவனம், பல்வேறு பின்னணிகளைக் கொண்ட சிங்கப்பூரர்களுக்கே அதிகம் வாய்ப்பு கொடுத்திருப்பதாகக் கூறியது.

சுழற்சி அடிப்படையில் வெளிநாட்டுத் திறனாளர்கள் இங்கு பணியமர்த்தப்படுகின்றனர்.

அதேபோல் சிங்கப்பூரர்கள் அந்நிறுவனத்தின் வெளிநாட்டுக் கிளைகளில் பணிபுரிவதை அது சுட்டியது.

30ஆண்டாய்ச் சிங்கப்பூரில் செயல்படும் மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனமான Thermo Fisherஇல் 1,600 பேர் வேலைசெய்கின்றனர்.

விரைவில் மேலும் 400 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் நிறுவனம் கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்