Images
  • MOM

வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறிய நால்வரின் வேலை அனுமதி ரத்து

சிங்கப்பூரில் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறிய நால்வரின் வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் மூவர் வேலை அனுமதி அட்டை வைத்திருந்தவர்கள்.

ஒருவர், S Pass அனுமதியில் இங்கு வேலை செய்தவர்.

வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றும் காலத்தில், தகுந்த காரணமின்றி, அமைச்சின் அனுமதியின்றி அவர்கள் வெளியே சென்றதாகக் கூறப்பட்டது.

வசிப்பிடத்தை விட்டு வெளியேறிய இருவர், அமைச்சின் Smartwatch கண்காணிப்புக் கருவி மூலம் அடையாளம் காணப்பட்டனர்.

எஞ்சிய இருவர் குறித்துப் புகார் அளிக்கப்பட்டதாக அமைச்சு சொன்னது.

வீட்டில் தங்கும் உத்தரவை மீறியதன் தொடர்பில் மே மாதத்திலிருந்து இதுவரை மொத்தம் 44 பேரின் வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேலை அனுமதி அட்டை வைத்திருப்போரும், முதலாளிகளும் தனிமைப்படுத்தும் உத்தரவை மதித்து நடக்குமாறு அமைச்சு அறிவுறுத்தியது.  

Top