Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேலையிட மரணம்- நிறுவன உரிமையாளருக்கு ஆக அதிகத் தொகை அபராதம்

Hiap Seng Lorry Enterprises நிறுவனத்தின் உரிமையாளருக்கு, வேலையிட மரணத்தை விளைவித்ததற்காக, இதுவரை விதிக்கப்படாத ஆக அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
வேலையிட மரணம்- நிறுவன உரிமையாளருக்கு ஆக அதிகத் தொகை அபராதம்

(படம்: மனிதவள அமைச்சு)

Hiap Seng Lorry Enterprises நிறுவனத்தின் உரிமையாளருக்கு, வேலையிட மரணத்தை விளைவித்ததற்காக, இதுவரை விதிக்கப்படாத ஆக அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அதன் உரிமையாளர் ஓங் சின் சோங்குக்கு (Ong Chin Chong) 140,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக மனிதவள அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், வேணுகோபால் சரத்குமார் எனும் ஊழியர், Sunway Concrete Products நிறுவனத்தின் பணியிடத்தில் கம்பிவடத் தகடுத் தொகுதிகளை இறக்கிவைத்துக்கொண்டிருந்தபோது மாண்டார்.

ஓங் பாரந்தூக்கியை இயக்க, வேணுகோபாலும், தெட்சிணாமூர்த்தி என்பவரும் கம்பிவடத் தொகுதியை இறக்கி வைத்துக்கொண்டிருந்தனர்.

அந்தக் கம்பிவடத் தொகுதியின் மொத்த எடை 1.57 டன். பாரந்தூக்கி இயங்கும்போது, சங்கிலி தாங்காமல் அது சரியத் தொடங்கியது.

அது முற்றிலுமாகச் சங்கிலியிருந்து நழுவிச் சரிந்ததில் அதற்கிடையே வேணுகோபால் சிக்கிக்கொண்டார்.

அங்கு உடனடியாக விரைந்த மருத்துவ உதவியாளர்கள் அவர் மாண்டுவிட்டதை உறுதிப்படுத்தினர்.

ஓங் தமது ஊழியர்களின் பாதுகாப்பை எந்தெந்த விதத்தில் உறுதி செய்திருக்கவேண்டும் என்பதை மனிதவள அமைச்சு பட்டியலிட்டது.

மேலும் இரு ஊழியர்களும் அத்தகைய கனமான பொருள்களைக் கையாளத் தேவையான பயிற்சிகளைப் பெற்றிருக்கிறார்களா என்பதை ஓங் உறுதிசெய்யவில்லை என்பதையும் மனிதவள அமைச்சின் அறிக்கை சுட்டியது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்