Images
  • Workplace Fatality (1)
    (படம்: REUTERS/Edgar Su) 

2004ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆகக் குறைவான வேலையிட மரணங்கள்

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு வேலையிட மரணங்கள், 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆகக் குறைவாக இருந்தன.

வேலையிடப் பாதுகாப்பு - சுகாதார மன்றம், வேலையிடப் பாதுகாப்பு - சுகாதாரக் கல்விக்கழகம், மனிதவள அமைச்சு ஆகியவை இன்று வெளியிட்ட கூட்டறிக்கை அதனைத் தெரிவித்தது.

சென்ற ஆண்டு 42 வேலையிட மரணங்கள் ஏற்பட்டன.

அதற்கு முந்தைய ஆண்டு அது 66ஆக இருந்தது. 

Top