Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேலையிடத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை ஆண்டின் முற்பாதியில் 25% குறைந்துள்ளது

சிங்கப்பூரில் இந்த வருடத்தின் முதற்பாதியில் வேலையிட விபத்துகளில் காயமுற்றோரின் எண்ணிக்கை சுமார் 25 விழுக்காடு குறைந்துள்ளதாக மனிதவள அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

வாசிப்புநேரம் -
வேலையிடத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை ஆண்டின் முற்பாதியில் 25% குறைந்துள்ளது

படம்: AFP/Roslan RAHMAN

சிங்கப்பூரில் இந்த வருடத்தின் முதற்பாதியில் வேலையிட விபத்துகளில் காயமுற்றோரின் எண்ணிக்கை சுமார் 25 விழுக்காடு குறைந்துள்ளதாக மனிதவள அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

சென்ற ஆண்டின் முதற்பாதியில், சுமார் 6,600ஆக இருந்த அந்த எண்ணிக்கை, இந்த வருடத்தின் முதற்பாதியில் கிட்டத்தட்ட 5,000 ஆகக் குறைந்தது.

COVID-19 சூழலால் வேலையிடங்களில் நடவடிக்கைகள் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதால் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் குறைவான விபத்துகள் பதிவாகின.

இந்த ஆண்டின் முதற்பாதியில், வேலையிட விபத்துகளால் 16 பேர் மாண்டனர். கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, அது குறைவு.

இந்த வருடத்தின் ஜூன் மாத இறுதி நிலவரப்படி, ஓராண்டில் மரணமடைந்தோரின் விகிதம் நூறாயிரம் ஊழியர்களுக்கு 1.1 என இருந்தது.

உயரத்திலிருந்து கீழே விழுதல், வாகனம் தொடர்பான விபத்துகள், கட்டமைப்போ சாதனமோ சரிந்து விழுதல் அல்லது பழுதடைதல் போன்றவை, வேலையிட மரணத்துக்கான முக்கியக் காரணங்கள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்