Images
  • education
    கோப்புப் படம்: AFP

சுகாதாரம், கல்வி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட மனிதவளக் குறியீட்டில் சிங்கப்பூருக்கு முதலிடம்

மனிதவளத்தை மேம்படுத்துவதில் திறன்பெற்ற நாடுகளைத் தரநிலைப்படுத்தும் புதிய முறையை உலக வங்கிக் குழுமம் உருவாக்கியுள்ளது.

கல்வியிலும் சுகாதாரப் பராமரிப்பிலும் மேலும் திறமையாக முதலீடு செய்ய அரசாங்கங்களை ஊக்குவிப்பது அதன் நோக்கம்.

உலக வங்கியின் மனிதவளக் குறியீட்டில் சிங்கப்பூர் முதலிடம் வகித்தது. தென்கொரியாவும் ஜப்பானும் இரண்டாம், மூன்றாம் நிலைகளில் வந்தன.

தரநிலையில் ஆப்பிரிக்க நாடுகள் இறுதி இடங்களைப் பிடித்தன.

சுகாதாரம், கல்வி, வாழ்வதற்கு உகந்த அம்சங்கள், நாடுகளின் உத்தேசப் பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டன.

உலக வங்கியின் 157 உறுப்பு நாடுகளும் அதில் பங்கேற்றன.

இந்தோனேசியாவின் பாலித் தீவில் நடைபெற்ற உலக வங்கி, அனைத்துலகப் பண நிதியம் ஆகியவற்றின் ஆண்டுக் கூட்டத்தில் அந்தக் குறியீடு வெளியிடப்பட்டது.


Top