Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Okto ஒளிவழியில் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளைக் காணலாம்

மீடியாகார்ப் நிறுவனம் ஒன்பது உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளை இலவசமாக Okto ஒளிவழியில் ஒளிப்பரப்பவுள்ளது. 

வாசிப்புநேரம் -
Okto ஒளிவழியில் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளைக் காணலாம்

படம்: Don Wong/TODAY

மீடியாகார்ப் நிறுவனம் ஒன்பது உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளை இலவசமாக Okto ஒளிவழியில் ஒளிபரப்பவுள்ளது. மற்ற ஆண்டுகளைக் காட்டிலும், இம்முறை ஐந்து கூடுதல் போட்டிகளைக் காணும் வாய்ப்பைக் காற்பந்து ரசிகர்கள் பெறுவர்.

ரஷ்யாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையில் நடைபெறவுள்ள தொடக்க ஆட்டத்தை ரசிகர்கள் இலவசமாகப் பார்க்க முடியும். அதே நேரத்தில் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் அரையிறுதி, இறுதிச் சுற்றுகளைக் காணும் வாய்ப்பையும் அவர்கள் பெறுவர்.

மீடியாகார்ப் நிறுவனம் Singtel, StarHub ஆகியவற்றுடன் இணைந்து உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் அனைத்து 64 போட்டிகளையும் ஒளிபரப்பவுள்ளது.   அதற்கான கட்டணங்கள் 2014-ஆம் ஆண்டை ஒத்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

2018 உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் ஜூன் 14ஆம் தேதியிலிருந்து ஜூலை 15ஆம் தேதி வரை ரஷ்யாவில் நடைபெறும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்