Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தாய்லந்துக் குகையில் சிக்கியவர்களின் வெற்றிகரமான மீட்புக்கு பிரதமர் லீ பாராட்டு

தாய்லந்துக் குகையில் சிக்கிக்கொண்ட சிறுவர்களும் அவர்களின் பயிற்றுவிப்பாளரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டது, மனித ஆற்றலின் சிறந்த பிரதிபலிப்பு என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் பாராட்டியுள்ளார்.

வாசிப்புநேரம் -
தாய்லந்துக் குகையில் சிக்கியவர்களின் வெற்றிகரமான மீட்புக்கு பிரதமர் லீ பாராட்டு

(படம்: CNA)

தாய்லந்துக் குகையில் சிக்கிக்கொண்ட சிறுவர்களும் அவர்களின் பயிற்றுவிப்பாளரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டது, மனித ஆற்றலின் சிறந்த பிரதிபலிப்பு என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் பாராட்டியுள்ளார்.

உற்சாகம் அளிக்கக்கூடிய, ஒத்துழைப்பு நிறைந்த கதை என அந்த மீட்பு நடவடிக்கையை அவர் வர்ணித்தார். குகையில் சிக்கிக்கொண்ட 13 பேரையும் மீட்கும் முயற்சியில் பலதரப்பட்ட மக்களும் அக்கறை காட்டியதை அவர் சுட்டினார்.

தாம் லுவாங் குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்களையும் அவர்களது பயிற்றுவிப்பாளரையும் மீட்கும் பணிகள் வெற்றிகராமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் லீ உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அவர்களது வாழ்த்தைத் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணிகள் நேற்று (ஜூலை 10) வெற்றிகரமாக முடிவடைந்தன.

மீட்புப் பணியில் ஈடுபட்ட ஊழியர்களைச் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் பாராட்டினார்.

அமெரிக்காவின் சார்பாக அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது Twitter பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்தார்.

மீட்புப் பணியில் உதவ அமெரிக்க இராணுவத்தின் பசிபிக் தளபத்தியம் தனது நிபுணர்களை அனுப்பியிருந்தது.

பிரிட்டனின் பிரதமர் தெரேசா மேயும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

அமெரிக்கா, பிரிட்டனைத் தவிர மியன்மார், லாவோஸ், பிலிப்பீன்ஸ், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் மீட்புப் பணியில் உதவின.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்