Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் கட்டப்பட்ட உலகின் ஆகப் பெரிய பாரந்தூக்கிக் கப்பல் அறிமுகம்

உலகின் ஆகப் பெரிய பாரந்தூக்கிக் கப்பலை சிங்கப்பூரின் Sembcorp Marine நிறுவனமும் Heerema Marine Contractors டச்சு நிறுவனமும் இணைந்து அறிமுகம் செய்துள்ளன.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் கட்டப்பட்ட உலகின் ஆகப் பெரிய பாரந்தூக்கிக் கப்பல் அறிமுகம்

படம்: YouTube/HuismanEquipment

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

உலகின் ஆகப் பெரிய பாரந்தூக்கிக் கப்பலை சிங்கப்பூரின் Sembcorp Marine நிறுவனமும் Heerema Marine Contractors டச்சு நிறுவனமும் இணைந்து அறிமுகம் செய்துள்ளன.

கடலின் நடுவே எண்ணெய்த் துரப்பண மேடைகளைப் புதிதாக நிறுவவும் அவற்றை அங்கிருந்து பிரித்து அகற்றவும் பாரந்தூக்கிக் கப்பல் உதவும். சுமார் 1.5 பில்லியன் டாலர் செலவில் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் இரண்டு பாரந்தூக்கிகள் உள்ளன. அவற்றால் 220 மீட்டர் உயரம்வரை பொருள்களைத் தூக்கி இறக்கமுடியும்.

அந்தப் பாரந்தூக்கிகளால் 20,000 டன் எடையைத் தூக்க முடியும். கடல்துறையில் இதுவரை எந்தவொரு பாரந்தூக்கியும் இவ்வளவு எடையைத் தூக்கும் ஆற்றல் படைத்தது அல்ல.

சிங்கப்பூரில் கட்டப்பட்ட The Sleipnir என்னும் அந்தப் பாரந்தூக்கிக் கப்பலில் 400 பேர் பயணம் செய்யலாம். அதில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதியும் நீச்சல் குளமும் உள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்