Images
  • SIA (1)
    படம்: SINGAPORE AIRLINES/AFP

சிங்கப்பூரிலிருந்து நியூயார்க் கிளம்பிய உலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின், உலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானம் நேற்று (அக்டோபர் 11) சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்கிற்குக் கிளம்பியது.

அந்த விமானத்தில், சிங்கப்பூரில் இருந்து நேரடியாக நியூயார்க் செல்வதற்கு மொத்தம் 19 மணி தேவைப்படும்.


SQ22 விமானம் நேற்றிரவு 11.30 மணியளவில் புறப்பட்டதாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார். அதில் 150 பயணிகளும் 17 விமான ஊழியர்களும் இருந்தனர்.

இரண்டு விமானிகள், சிறப்பு ஆரோக்கிய உணவு , 7 வாரத்துக்கு மேல் பொழுதுபோகக்கூடிய அளவுக்குத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

16,700 கிலோ மீட்டர் தொலைவை உற்சாகத்துடன் கடக்க பயணிகளுக்கு அது உதவும்.


Top