Images
  • anthony
    (படம்:  YouTube)

உலகின் ஆக வயதான முடிதிருத்துநருக்கு வயது 107

நியூயார்க்கில் 11 வயதிலிருந்து முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் 107 வயது திரு. அந்தோணி மான்சினெல்லி.

வாரநாட்களில் நண்பகல் முதல் இரவு 8 மணி வரை கடைக்கு வருபவர்களுக்கு வித விதமாக முடிதிருத்துகிறார் இவர்.

2007இல் உலகின் ஆக வயதான முடிதிருத்துநர் என்ற பட்டத்தை வென்ற இவர், 11 ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்த நிலையை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

தலைநிறைய நரைமுடி, நடுங்காத கைகள், மெலிந்த உடல்வாகு கொண்ட திரு. மான்சினெல்லியின் வயதை வாடிக்கையாளர்கள் கேட்கும் போது அசந்து போகிறார்களாம்.

இவரைவிட இளமையானவர்கள் நீண்ட நேரம் நிற்பதினால் கழுத்துவலி, முதுகுவலி எனப் புலம்புவர். ஆனால் இவரோ இன்னும் அபார சுறுசுறுப்புடன் செயல்படுகிறார்.

நீண்ட ஆயுளின் ரகசியம் உழைப்புதான் என்கிறார்.

அதிக மதுபானம் அருந்துவதோ, புகைபிடிப்தோ, அளவுக்கு மீறி உணவு உட்கொள்வதையோ பழக்கமாகக் கொண்டதில்லை இந்தத் தாத்தா.

மூக்குக்கண்ணாடிகூட இல்லாமல், தினமும் முடிதிருத்தும் பணிகளைப் பார்க்கிறார் இவர்.

ஒவ்வோர் ஆண்டும் அவரது பிறந்த நாளுக்காக கடைக்கு விடுப்பு கொடுத்து அங்கு பணிபுரிவோர் அவருக்குப் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். 

Top