Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"குற்றவியல் நீதிமுறையில் நியாயம்" தொடர்பில் நாடாளுமன்றத் தீர்மானம் கொண்டுவரப் பாட்டாளிக் கட்சி விண்ணப்பம்

அடுத்த மாதம் நாடாளுமன்றம் கூடும்போது, "குற்றவியல் நீதிமுறையில் நியாயம்" தொடர்பில் தீர்மானம் கொண்டுவரப் பாட்டாளிக் கட்சித் தலைவர் திருவாட்டி சில்வியா லிம் விண்ணப்பித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
"குற்றவியல் நீதிமுறையில் நியாயம்" தொடர்பில் நாடாளுமன்றத் தீர்மானம் கொண்டுவரப் பாட்டாளிக் கட்சி விண்ணப்பம்

கோப்புப்படம்: Humanitarian Organisation for Migration Economics

அடுத்த மாதம் நாடாளுமன்றம் கூடும்போது, "குற்றவியல் நீதிமுறையில் நியாயம்" தொடர்பில் தீர்மானம் கொண்டுவரப் பாட்டாளிக் கட்சித் தலைவர் திருவாட்டி சில்வியா லிம் விண்ணப்பித்துள்ளார்.

அண்மையில் இந்தோனேசியப் பணிப்பெண் பார்டி லியானியின் (Parti Liyani) வழக்கு விசாரணை எழுப்பிய 'ஆழமான பிரச்சினைகள்' அவரின் உரையில் இடம்பெறும் என்று பாட்டாளிக் கட்சி இன்று Facebookஇல் அறிக்கை வெளியிட்டது.

சாங்கி விமான நிலையக் குழுமத்தின் முன்னாள் தலைவர் லியூ மன் லியோங் (Liew Mun Leong)
வீட்டில் திருடியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து குமாரி பார்டி இம்மாதம் விடுவிக்கப்பட்டார்.

அந்த வழக்கு, விசாரணையைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளதாகத் தலைமை நீதிபதி அலுவலகம் தெரிவித்திருந்தது. அந்த வழக்கு தொடர்பில் மறுஆய்வு செய்யப்படுகிறது.

நாடாளுமன்றக் கூட்டம் முடிவுறும்போது, பொது அக்கறைகள் தொடர்பில் தீர்மானம் கொண்டு வர நாடாளுமன்ற உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆனால், ஒரு நாடாளுமன்றக் கூட்டத்தில் ஓர் உறுப்பினர் மட்டுமே உரையாற்ற அனுமதிக்கப்படும். ஒருவருக்கு மேல் உரையாற்ற விரும்பினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்