Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"உங்கள் வாக்கை அர்த்தமுள்ளதாக்குங்கள்" என்ற முழக்கவரியுடன் தேர்தல் கொள்கை அறிக்கை வெளியிட்டுள்ள பாட்டாளிக் கட்சி

தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ள பாட்டாளிக் கட்சி, "உங்கள் வாக்கை அர்த்தமுள்ளதாக்குங்கள்" என்ற பிரசார முழக்கத்தையும் அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ள பாட்டாளிக் கட்சி, "உங்கள் வாக்கை அர்த்தமுள்ளதாக்குங்கள்" என்ற பிரசார முழக்கத்தையும் அறிவித்துள்ளது.

பாட்டாளிக் கட்சியின் 39 பக்க அறிக்கை 5 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.

COVID-19 கிருமிப் பரவலை எவ்வாறு கையாள்வது, நெருக்கடியான காலக்கட்டத்துக்குப் பிறகு எவ்வாறு முன்னேற்றம் காண்பது ஆகியவையும் அவற்றில் அடங்கும்.

COVID-19 கிருமித்தொற்றுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்டவுடன் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் அதை இலவசமாக வழங்குமாறு அரசாங்கத்திடம் பாட்டாளிக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

எல்லாரையும் உள்ளடக்கும் கல்வி, சமூகக் கொள்கைகள், வாழ்வாதாரச் செலவுகளைக் குறைத்தல் ஆகியன குறித்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்பங்களுக்கு சுமையைக் கூட்டும், பொருள், சேவை வரி உயர்வை எதிர்ப்பதாக அது தெரிவித்துள்ளது.

பொறுப்பான அரசியல், நிர்வாக அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் மீள்திறன் கொண்ட ஜனநாயகத்தை உருவாக்கப் பாட்டாளிக் கட்சி பரிந்துரைத்துள்ளது.

பெண்கள், இளையர், பெற்றோர், மூத்தோர் என எல்லாத் தரப்பினருக்கும் ஏற்ற புத்தாக்கச் சிந்தனை தேவை என்று பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம் குறிப்பிட்டுள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்