Images
  • WP on msia's actions (1)
    (படம்: AFP/Roslan Rahman)

மலேசியாவின் தூண்டுதல் நடவடிக்கை தேவையில்லாதது: பாட்டாளிக் கட்சி

சிங்கப்பூர் நீர்ப்பகுதியினுள் மலேசியா அத்துமீறுவது பற்றிப் பாட்டாளிக் கட்சி மிகுந்த கவலை தெரிவித்துள்ளது.

மலேசியாவின் வரம்பு மீறும் நடவடிக்கை தேவையில்லாதது என்று அக்கட்சி இன்று (டிசம்பர் 8) கூறியது.

மலேசியாவின் நடவடிக்கை, இரு நாட்டு மக்களிடமும், குறிப்பாக இளையர்களிடம் தவறான கருத்தை வெளிப்படுத்துவதாக பாட்டாளிக் கட்சி குறிப்பிட்டது.

ஜொகூர் துறைமுகம் தொடர்பான சர்ச்சையில் சிங்கப்பூரின் நிலைப்பாட்டுக்கு முழு ஆதரவளிப்பதாகவும் பாட்டாளிக் கட்சி தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையே வலுவான நட்பு இருப்பதைச் சுட்டிக்காட்டிய பாட்டாளிக் கட்சி, இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்தி சர்ச்சைக்குத் தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டது.  

Top