Images
  • SportsSg
    படம்: Facebook/Singapore National Olympic Council

தவறான வெற்றியாளரை அறிவித்ததற்காக SportSG மன்னிப்பு

சென்ற செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிங்கப்பூர் விளையாட்டு விருது நிகழ்ச்சியில் இவ்வாண்டின் ஆகச் சிறந்த விளையாட்டுச் செய்தியாளர் விருது தவறானவருக்கு வழங்கப்பட்டதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான SportSG நிறுவனம் நேற்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று The New Paper-ரைச் சேர்ந்த செய்தியாளர் திரு. டிலெஞ்சிட் சிங் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

ஆனால், உண்மையில் The Straits Times நாளேட்டைச் சேர்ந்த திரு. சசாலி அப்துல் அஸிஸ்தான் வெற்றியாளர்.

வெற்றிக்குரிய கட்டுரைகளை எழுதியது அவர்தான்.

தவறான செய்தியாளருடன் அந்தக் கட்டுரைகளைத் தொடர்புபடுத்தியதற்கு, நிர்வாகத் தவறு காரணமாகச் சுட்டப்பட்டது.  

Top