Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நிமோனியாக் காய்ச்சல் - சிங்கப்பூரில் 52 வயது ஆடவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

சிங்கப்பூரில், 52 வயது ஆடவர் ஒருவர் நிமோனியாக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
நிமோனியாக் காய்ச்சல் - சிங்கப்பூரில் 52 வயது ஆடவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

(படம்:Pixabay/qimono)

சிங்கப்பூரில், 52 வயது ஆடவர் ஒருவர் நிமோனியாக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சீனாவின் வூஹான் (Wuhan) நகருக்கு சென்றிருந்த அவர், அங்குக் கொரோனா (Corona) கிருமி தோன்றியதாகச் சந்தேகிக்கப்படும் கடலுணவுச் சந்தைக்கு செல்லவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவரது உடல்நலம் சீராக உள்ளதாய் அது கூறியது.

வூஹான் நகரில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய 6ஆவது நபர் அவர்.

முன்னதாய், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களைக் கண்காணித்த பிறகு அனைவருக்கும் கொரோனா கிருமித் தொற்று இல்லை என்பதை சுகாதார அமைச்சு உறுதிசெய்தது.

இதற்கிடையே, கொரோனா கிருமி தொற்று, சீனாவின் ஷென்சென் (Shenzhen), ஷாங்ஹாய் (Shanghai) நகரங்களுக்கும் பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஷென்சென் நகரில் இரண்டு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாய் The South China Morning Post நாளேடு, செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62க்கு உயர்ந்துள்ளதாய்ச் சீனா தெரிவித்துள்ளது.

வியட்நாம், ஹாங்காங், தைவான் ஆகியவை கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில், சிலர் கண்காணித்து வருகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்