Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பேரங்காடியில் பானத்தைக் குடித்துவிட்டு மீண்டும் வைத்த ஆடவரின் ஒப்புதல் முறையீடு நிராகரிக்கப்பட்டது

பேரங்காடியில் பானத்தைக் குடித்துவிட்டு மீண்டும் வைத்த ஆடவரின் குற்ற ஒப்புதல் முறையீட்டை, நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வாசிப்புநேரம் -

பேரங்காடியில் பானத்தைக் குடித்துவிட்டு மீண்டும் வைத்த ஆடவரின் குற்ற ஒப்புதல் முறையீட்டை, நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் வூஹான் கிருமியை எப்படிப் பரப்புவது ? ("how to spread Wuhan virus") என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

17 வயது நைஜல் பாங் இயூ மிங் (Nigel Pang Yew Ming) பேரங்காடியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 2 பழச்சாறு போத்தல்களை எடுத்துக் கொஞ்சம் குடித்துவிட்டு அவற்றை மீண்டும் அடுக்கி வைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

பாங் காணொளியில் செய்த செயலை ஒப்புக்கொண்டாலும், Instagram-மில் அதனோடு சேர்ந்து வெளியான தலைப்புப்பற்றித் தமக்குத் தெரியாது என்று முறையிட்டார்.

தமது நண்பரான குவெக், தமது அனுமதி இல்லாமலேயே அந்தத் தலைப்பைச் சேர்த்ததாக பாங் கூறினார்.

அந்தத் தலைப்பு, குற்றச்சாட்டின் முக்கிய அம்சம். ஆகவே, அது தொடர்பான உண்மை விவரங்களை அறியவேண்டியிருப்பதாகக் கூறி பாங்கின் குற்ற ஒப்புதல் முறையீட்டை நீதிபதி நிராகரித்தார்.

அவருடன் இருந்த நண்பர் காணொளியைத் தமது கணக்கில் பதிவேற்றி, அது வேகமாகப் பரவிய பின்னரே அதில் இடம்பெற்ற வார்த்தைகளைப் பற்றித் தமக்குத் தெரியவந்ததாகக் கூறினார்.

ஆடவரின் தாயார், பாங்கை உண்மையைப் பேசச் சொன்னபோதும் அவர் தமது தரப்பை தற்காத்துப் பேசினார்.

அதனையடுத்து நீதிபதி, குற்ற ஒப்புதலை நிராகரித்து பாங்கை ஒரு வழக்குரைஞரை நியமித்து வாதிட வருமாறு உத்தரவிட்டார்.

குற்ற ஒப்புதலை ஏற்றுத் தமக்கான தண்டனையைத் தீர்மானிக்குமாறு நீதிபதியிடம் முறையிட்ட பாங், இந்தச் சம்பவத்தால் தாம் நிம்மதியை இழந்திருப்பதாகச் சொன்னார்.

ஆடவரின் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாங்கின் நண்பர் குவெக் மீதான வழக்கு விசாரணை அடுத்த மாதம் நடைபெறும்.

பொது இடத்தில் தொல்லை ஏற்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், இருவருக்கும் அதிகபட்சமாக மூன்று மாதச் சிறைத்தண்டனையோ, 2000 வெள்ளி வரையிலான அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்